தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகள் பாவித்த கிளிநொச்சி இரணைமடு வானூர்தி ஓடு பாதையை இந்திய வான் படையினர் தற்பொழுது பாவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வானூர்தி தளத்தை இந்திய அரசிடம் சிறீலங்கா அரசு கையளித்துள்ளதால் அதிருப்தி அடைந்துள்ள வான் படைத் தளபதிகள் மூலம் இந்தத் தகவல் வெளியாகி இருக்கின்றது. இரணைமடு உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால், அங்கு கீழ்நிலை படை அதிகாரிகளோ, படையினரோ செல்லுவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த வானூர்தி தளத்தில் இருந்து இந்திய வான் படையினர் இந்தியாவிற்கு நேரடியாகப் பயணம் செய்து வருவதுடன், இந்தியாவில் இருந்து செல்லும் இந்தியப் படையினர் சிறீலங்கா படையினருக்கு பயிற்சிகளை வழங்கியும் வருகின்றனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இரணைமடு காட்டுக்கள் அமைத்திருந்த இந்த வான்படைத் தளம் தொடர்பாக படைத்துறை ஆய்வாளர்கள் தமது வியப்பை வெளியிட்டிருந்தனர். அண்மையில் இரணைமடுவில் தொலைத்தொடர்புக் கோபுரம் அமைக்கும் பணியின்போது பலர் உயிரிழந்திருந்தனர். யாழ் பருத்தித்துறை மற்றும் குருநகர் ஆகிய இடங்களுடன் தொடர்பைப் பேணும் வகையில் இந்தக் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் இந்தியாவிற்கான தொலைத்தொடர்பு பேணப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இரணைமடு உட்பட ஏ-9 பாதைக்கு கிழக்கேயுள்ள பகுதிகளில் குறிப்பாக விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்களாக விளங்கிய இடங்களில் மக்கள் மீளக்குடியேற சிறீலங்கா படையினர் தடை விதித்து வருகின்றனர்.
Saturday, April 24, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment