Friday, April 23, 2010

380,000 இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை: செய்திஆய்வு (வீடியோ இணைப்பு)

இலங்கையின் இனப்போர் யுத்தம் முடிவுக்குவந்து ஏறத்தாழ ஒரு வருடம் ஆகிறது. சிறிலங்காவின் அரச தலைவர் இடம்பெயர்ந்த மக்களை ‘விடுவித்து’ ஏறத்தாழ நான்கு மாதங்கள் ஆகின்றது. இந்த வருடம் இரண்டு தேர்தல்கள் இடம்பெற்றுள்ளபோதிலும், தமிழர் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா?இரண்டாம் உலக யுத்த காலப்பகுதியில் நிறுவப்பட்ட தடுப்பு முகாம்களைவிட மோசமானவையாகக் கருதப்படும் தடுப்பு முகாம்களினுள் ஆயிரமாயிரம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறிலங்காவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராய்கிறது டிஜிற்றல் ஜேர்ணல்.2009 ஆம் ஆண்டின் இறுதியில், சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக முட்கம்பி வேலிக்குள் இருக்கும் தமிழ் மக்களைத் தான் விடுவிப்பதாக சிறிலங்கா அதிபர் அறிவித்தபோதிலும், பலர் இன்னும் அந்த தடுப்பு முகாம்களிலேயே தொடர்ந்தும் வாடுகிறார்கள்.அவ்வாறு தமது ஊர்களுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் கூட தமது வீடுகளும் கிராமமும் அழிவடைந்த நிலையில் இருப்பதால், ஆயிரக்கணக்கானவர்கள் தமக்கான தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் சிங்கள மக்களின் கலாசாரத்திற்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்வதற்கான புனர்வாழ்வு முகாம்களுக்குச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர்.‘பெரும்பாலான வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டன அல்லது மோசமாக சேதமாக்கப்பட்டுள்ளன. வன்னியில், மீள்குடியேற்றம் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. அரைவாசிக்கு மேற்பட்டோர் மீள்குடியேற்றப்பட்டுவிட்டார்கள். ஆனால் இன்னமும் கண்ணிவெடி அகற்றப்படாத பகுதிகள் இருக்கின்றன’ என ஐ.நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகத்தின் சிரேஸ்ட அலுவலர் விக்கி ரெனண்ட் தெரிவித்தார்.டிசம்பர் 1 ஆம் திகதியிலிருந்து வரையறுக்கப்பட்ட நடமாடும் சுதந்திரத்துடன் 93,000 இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் தடுப்பு முகாம்களில் இருப்பதாகவும் முகாமைவிட்டு வெளியே செல்ல விரும்புபவர்களுக்கு இரண்டு வாரங்கள் சென்றுவருவதற்கான பயண அனுமதி வழங்கப்படுவதாகவும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களைக் கண்காணிக்கும் நிலையம் Internal Displacement Monitoring Centre (IDMC) தெரிவிக்கிறது.92,000 மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். மேலும் 93,000 மக்கள் தமது உறவினர்களுடனும் நண்பர்களுடனும் வாழ்கின்றனர். சிட்னி மோணிங்க் கெரால்ட் இன் தகவலின்படி, சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கோ அல்லது சர்வதேச ஊடகங்களுக்கோ அனுமதி வழங்கப்படாமல் இரகசியமான இடம் ஒன்றில் 10,000-15,000 மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் சித்திரவதைக்கும் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாவதாக எண்ணற்ற குற்றச்சாட்டுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் வாழும் இடம் ஒன்றுக்குச் செல்வதற்கான அனுமதி அதிஸ்டவசமாக பிரான்ஸ் 24 (France 24) இன் செய்தியாளருக்குக் கிடைத்ததாக சிறிலங்காவில் போரை நிறுத்துவதற்கான கூட்டமைப்பின்Coalition to Stop the War in Sri Lanka (CTSWSL) பேச்சாளரான சேந்தன் நடா தெரிவித்தார். அவர்களில் பெரும்பாலானவர்களின் வீடுகள் சிங்களப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது அல்லது சிறிலங்கா இராணுவத்தால் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.‘இந்த அறிக்கையின்படி, வடக்கில் இடம்பெயர்ந்த மக்களின் பெரும்பான்மையான வீடுகள் ஆயுதக் குழு உறுப்பினர்களாலும் அவர்களின் குடும்பங்களாலும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மரங்களின் கீழும் தரப்பாள் கொட்டில்களிலும் வாடுகின்ற அதேவேளையில், அவர்களின் நிலங்களை அபகரித்து சிங்கள குடியேற்றங்களை நிறுவும் முனைப்பில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது’ என்றார் நடா.பல இடம்பெயர்ந்த மக்கள் தமது பாரம்பரிய வாழ்விடங்களுக்கு வெளியே எந்தவிதமான உதவிகளோ அல்லது வீட்டுத்திட்டங்களோ இல்லாமல் குடியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கக்கூடிய வகையில் சர்வதேச சுதந்திர விசாரணைக்குழு ஒன்றை ஐ.நா. அமைக்கவேண்டும் என்று கோரி சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை மே மாதம் நடாத்த உள்ளது.பொதுநலவாய அமைப்பில் சிறிலங்காவின் உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்கு கனடா தனது சர்வதேச செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என கனடா வாழ் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக CTSWSL இன் பேச்சாளர் தெரிவித்தார். அவ்வாறு இடைநிறுத்துவது சிறிலங்கா சர்வதேச மனித உரிமை ஒழுங்குவிதிகளுக்குக் கட்டுப்பட்டு அவற்றைக் கடைப்பிடிக்கும் நிலைக்கு வழிவகுக்கும் என CTSWSL நம்புகிறது.ஜக் லேரன், ஒலிவியா சௌ மற்றும் பொப் றே உள்ளிட்ட கனேடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நவம்பரில் இடம்பெயர்ந்த மக்கள் வருவதற்கு ‘கனடாவின் கதவுகளைத் திறந்துவிடுமாறு’ பிரதமர் ஸ்ரீபன் காபரிடம் கோரிக்கைவிடுத்தனர். கனடாவில் புகலிடம் கோருவதற்கு முற்பட்ட 76 இற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் வன்கூவரில் கைது செய்யப்பட்டு கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டுள்ளனர்.சிறிலங்காவினுள் இறையாண்மையுள்ள தமிழ் அரசு ஒன்றை நிறுவுவதற்கான கருத்துக்கணிப்பொன்றை கனேடிய தமிழ் மக்கள் டிசம்பரில் நடாத்தினர். 99.8 வீதமான மக்கள் தனி நாட்டுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.IDMC இன் அறிக்கையின்படி, 21.1 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட சிறிலங்காவில் 380,000 இடம்பெயர்ந்த மக்கள் இருக்கின்றனர்.

Blog Archive