இலங்கையில் ஆக கூடிய ஆசனங்களை பெற்ற மூன்றாவது கட்சியாக இலங்கை தமிழரசுக் கட்சி தெரிவாகியுள்ளது.
வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி கடந்த முறை பாராளுமன்றத்தில் 22 ஆசனங்களைப் பெற்றிருந்தது. ஆனால் இப்போ 12 ஆசனங்களை பெற்றுள்ளது.
திருமலையில் முடிவு உத்தியோக பூர்வமாக கிடைக்காத போதும் அங்கும் ஒரு ஆசனம் கிடைக்கலாம் இதன்படி 13 ஆசனங்கள் கிடைக்கும்.
தேசியபட்டியல் மூலம் இரண்டு கிடைக்கும் சாத்தியம் உள்ளது.
அதேவேளை, மட்டக்களப்பில் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தோல்வியை தழுவியுள்ளார்.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் சக்தி தொலைக்காட்சியின் சிரேஷ்ட ஊடகவியலாளரும்,மின்னல் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான ஜெ.ஸ்ரீரங்கா வெற்றி பெற்றுள்ளார். பிரஜைகள் முன்னணியின் பொதுச்செயலாளரான ஜெ.ஸ்ரீரங்கா ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டவராவார்
Saturday, April 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment