Friday, April 2, 2010

இறுதிப் போரில் உயிரிழந்த 25 சிரேஷ்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் மலையகத்தை சோ்ந்தவர்கள்

இறுதிக் கட்ட போரின் போது உயிரிழந்த 25 சிரேஷ்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் கண்டி மற்றும் மாத்தளைப் பிரசேதங்களைச் சேர்ந்தவர்கள் என லக்பிம தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்னர் இது குறித்த விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத் தாக்குதலில் உயிரிழந்த குறித்த நபர்கள் புலிகளின் சிரேஷ்ட பதவிகளை வகித்தவர்கள் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

மத்திய மாகாணத்தில் குறித்த நபர்களின் ஆதரவுடன் புலி உறுப்பினர்கள் செயற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் நடத்தப்படவுள்ளது.

No comments:

Post a Comment