தமிழ் மக்களின் பிறப்புரிமையான சுயநிர்ணயத்தை விட்டுக்கொடுக்காமல் ஜனநாயக ரீதியான அரசியல் நடவடிக்கையை முன்னெடுக்கிறோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் செயலாருமான மாவை சேனதிராஜா கலந்துரையாடலில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின் போது சரத்பொன்சேகாவை ஒரு வியூகத்தின் அடிப்படையில் ஆதரித்தாகவும் அவர்களுடன் நடாத்திய பேச்சுவார்த்தையின் போது வடகிழக்கு நிர்வாகத்தை தமிழ் மக்கள் பொறுப்பேற்று நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட்டதாகவும் அந்த முடிவினை மலையக கட்சிகளும் முஸ்லீம் கட்சிகளும் ஏற்றுகொண்டிருந்தனர் எனவும் தெரிவித்தார்.
சிங்கள இனவாதிகளாலும் ஆளும் கட்சியினாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்யப்படவேண்டும் என கூறுவதன் நோக்கம் தமிழ் மக்களின் உரிமைகளை பற்றி பேசுவதை இவர்கள் சகித்து கொள்ளமுடியாமால் இருப்பதையை எடுத்து காட்டுவதாகவும் தெரிவித்த அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்தால் தாயகத்திலும் புலம் பெயர்ந்த நாட்டிலும் உள்ள தமிழ் மக்களை ஒன்றிணைத்து அதற்க்கு எதிராக ஜனநாயக ரீதியான போரட்டங்கள் நடாத்தபடும் எனவும் கூறினார்.
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிபலிக்கின்ற அரசியல் கட்சி என்ற ரீதியில் தோல்வி மனப்பான்மை கருத்தில் கொண்டு செயற்பட முடியாது எனவும் அப்படி செயற்படுவதாயின் அது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை இழந்த ஒரு மக்கள் கூட்டமாகிவிடும் எனவும் தெரிவித்தார்.
2004ம் ஆண்டு இருந்த வடகிழக்கு நிலைமை இன்று இல்லை எனவும், 70வீதமான வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் நிலங்கள் ஜனாதிபதி மகிந்தவினால் மகிந்த சிந்தனை அடிப்படையில் பசில் ராஜபக்சவினால் பறிக்கபட்டுள்ளன. அத்தோடு சிங்கள இராணுவத் தளபதிகளை நியமித்து சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அத்தோடு தமிழ் இன அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவித்தார்.
தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து செயற்படவேண்டும் என்பதற்காக தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மாநாபா அணி மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி ஆகியோர்களுடன் பல பேச்சுவார்த்தைகள் நடாத்தியபோதும் அவை வெற்றியளிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படை தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்படுகிறதா எனக் கேட்கப்பட்டபோது தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்த காலகட்டத்திலும் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலின் படி செயற்படவில்லை எனவும் அப்படி செயற்படப் போவதில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணயம் பற்றி குறிப்பிட்டதை இந்தியா விரும்பாது எனவும் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் செயலாருமான மாவை சேனதிராஜா இந்தியாவை நிராகரித்து அரசியல் தீர்வை சிந்திப்பது ஆரோக்கியமானதாக இருக்காது எனவும் கடந்த காலத்தில் இது போன்று தவறுகள் நடந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
இணக்கபாட்டு அரசியல் நடாத்திய தமிழ் அரசியல் கட்சிகள் அல்லது நடாத்துகின்ற தமிழ் கட்சிகள் ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சியின் கீழ் பிரிக்கப்பட்ட வட கிழக்கை இணைக்கவோ அல்லது அகதிகளாக ஆக்கப்பட்ட எமது மக்களை துரிதமாக மீளகுடியேற்றச் செய்யவோ அல்லது சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவோ அல்லது எமது பகுதியை சிங்களமயப்படுத்தும் நடவடிக்கை தடுத்து நிறுத்த கூட இணக்க அரசியல் நடாத்திய தமிழ் அரசியல் கட்சிகளால் முடியவில்லை எனவும் சுட்டிகாட்டினார்.
தற்போது நடைபெறுகின்ற தேர்தலை பொறுத்தமட்டில் திருகோணமலையில் தமிழ் காங்கிரஸ் செயலாளர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் போட்டி வேட்பாளரை நிறுத்தியதன் ஊடாக வரலாற்று துரோகத்தை செய்து மகிந்த ராஜபக்சவின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படுவதாகவும் தெரிவித்தார்
No comments:
Post a Comment