இப்போது போர் முடிந்து ஒரு வருடம் ஆகப்போகிற நிலையில் வடக்கில் சில ஆயிரம் மக்களை குடியேற்றும் போது இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது. ப்ரியங்கா , நளினியை வேலூரில் சந்தித்தபின்பு வன்னியில் இருந்த நான்கு லட்சம் மக்களில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் எண்ணிக்கையில் குறைந்திருக்கிறார்களே அவர்கள் எங்கே போனார்கள் என்ன ஆனார்கள்? நளினியின் இந்தச் சந்திப்புக்கும் போர் வெறி பிடித்த சோனியா ஈழ மக்களிடம் காட்டிய கருணைக்கும் ஏதேனும் தொடர்பிருக்குமா? இதுதான் காந்தி வாரிசுகளின் கருணையா என்றெல்லாம் கேட்பதற்கு கேள்விகள் இருந்தாலும் இந்தக் கேள்வியை அங்கிருந்து தொடங்குவதை விட நமது முதுகிலிருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும்.
ராஜீவ் கொலையில் தண்டனைக்குள்ளாகி 19 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி 2007ம் ஆண்டு தன்னை விடுதலை செய்யுமாறு தமிழக அரசிடம் விண்ணப்பித்தார். அப்போது போர் இல்லை. தமிழர்களை காப்பாற்றக் கோரி யாரும் கருணாநிதியிடம் கெஞ்சவும் இல்லை. ஆனாலும் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு அக்கோரிக்கையை நிராகரித்தது. தமிழக அரசால் நிராகரிக்கப்பட்ட அந்த கோரிக்கை நிமித்தம் 2008ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார் நளினி. 2008?ம், போய் 2009-ம் போய் இப்போது 2010-ம் வந்து விட்டது இடையில் ஓடிக் கழிந்த இந்த இரண்டு ஆண்டுகளில் ஈழத் தமிழர்களிடம் கருணாநிதி காட்டிய கருணையைத்தான் நாம் எல்லோரும் பார்த்தோமே! முடிந்த அளவு உதவி செய்யாமல் போனது மட்டுமல்ல விடுதலைக்காக போராடிய போராளிகளையும் செத்து விழுந்து பாடையில் போன ஈழ மக்களையும் அல்லவா இந்த மனிதர் இழிவு செய்தார். இந்தக் காயங்களை எங்கே ஆற்றுவது எப்படிப் போக்குவது என்று ஒரு இனமே தவித்து நின்றபோது, கருணா சொன்னார் “நான் உள்ளுக்குள் அழுகிறேன். எனது மௌனவலி யாருக்குத் தெரியும்?” என்றார். இதோ கருணாவின் மௌனவலியைப் புரிந்து கொள்ள இன்னொரு சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது.
இப்போது யாரும் போர் நிறுத்தம் கேட்கவில்லை, மக்களைக் காப்பாற்றக் கேட்கவில்லை. பதவியை விட்டு கீழே இறங்குங்கள் என்று யாரும் சொல்லவில்லை. ஒரே கோரிக்கைதான் ஆயுள் கைதியாக 19 ஆண்டுகள் சிறையில் இருக்கும் ஒரு பெண்ணை விடுதலை செய்யுங்கள் என்கிறோம். கருணை வழியும் தாயுள்ளமே, திராவிடத்தின் திரு உளமே ஒரு தாயை விடுதலை செய் என்கிறோம். நான் மட்டுமல்ல மனித உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் சக்திகள் என எல்லோருமே இணைந்து கவிஞர் தாமரையின் முன் முயற்சியில் ஒரு மனுவும் தயாரித்து 'கருணை உள்ளம்' கருணாநிதியிடம் நேரடியாகவே கொடுக்கப்பட்டது.
நளினி தன்னை விடுவிக்கக் கோரி கொடுத்த மனுவும் நளினியை விடுவிக்கக் கோரி கவிஞர் தாமரை கொடுத்த மனுவுக்குமிடையில கழிந்த இந்த இரண்டாண்டுகாலத்தில் மிகக் குறுகிய நிலப்பகுதிக்குள் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் எம் மக்களை அழைத்து வந்து கூட்டுக் கொலை செய்தது இந்தியாவும் இலங்கையும் அதற்கு மௌனமாக துணைபோனார் கருணாநிதி. போருக்கு ஆதரவான மௌனம் ஒரு பக்கம் இருந்தாலும், நளினியின் விடுதலையில் கருணாநிதி கட்டிய மௌனம் அதை விட தந்திரமானது. 2008 -ல் நளினி தாக்கல் செய்த மனுவுக்கு வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கினார். கிளிநொச்சியில் தொடங்கி அவர்கள் ஓடினார்கள் ஓடினார்கள் வாழ்க்கையின் விழிம்புக்கே ஓடினார்கள் என்கிற பராசக்தி வசனம் போல முள்ளிவாய்க்கால் வரை இரண்டு வருடமாக மக்கள் ஓடியது போல நளினியையும் இரண்டு வருடமாக ஓட விட்டார் கருணாநிதி.
ஒரு தனி நபரின் வாழ்க்கை தொடர்பான வழக்கு இது ஆகவே இதில் கால தாமதம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் சொல்ல கடைசியில் செயலற்றுக் கிடக்கும் தமிழக அரசின் நிலையைக் கண்டித்த நீதிமன்றம் சிறை ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து அறிக்கை தர வேண்டும் என்று உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தும் இடத்தில் இருக்கும் கருணாநிதி வேலூர் மாவட்ட ஆட்சியர் சி.ராஜேந்திரன் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அந்தக் குழு மூன்று மணி நேரம் நளினியை விசாரித்து அறிக்கையை தயாரித்து தமிழக அரசிடமும் கொடுத்து விட்டது. வழக்கை விரைந்து முடிக்கும் முன்னறிவிப்போடு கூடிய ? உயர்நீதிமன்றத்தில் ஆய்வுக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்ப?ட ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்றுக் கொள்வதாக ஆய்வுக் குழுவின் குரலில் நளினி விடுதலையை புறந்தள்ளியிருக்கிறார் கருணாநிதி.
செய்கிற அயோக்கியத் தனங்கள் எதையும் தன் குரலில் செய்ய மாட்டார் கருணா. அதுதான் அவரது அரசியல் தந்திரம். நானே அடிமை ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும் என்று பெரியாரின் குரலில் பேசி பொறுப்பைத் தட்டிக் கழித்தது போல ஆய்வுக் குழுவின் குரலில் தீர்ப்பை எழுதி விட்டு இங்கே தப்பித்துக் கொள்கிறார் கருணா. சரி நளினியை தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதற்காக இந்தக் குழு சொல்லியிருக்கும் காரணங்கள் என்ன?
காரணம் -1 நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக நளினி உள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்யும் திட்டம் நளினிக்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது.
காரணம் -2 நளினியின் மனப்பான்மை மாறவில்லை. அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.
காரணம் -3 நளினியின் தாய், சகோதரர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி வெளியில் வந்த தங்குவதற்கு அவருடைய பெற்றோர்கள் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்ததை கவனத்தில் கொண்டுள்ளோம்.
காரணம்- 4 நளினியின் பெற்றோர் கங்கை அம்மன் தெருவில் தங்கியிருக்கிறார்கள். அது விஐபிகள் வசிக்கும் இடம். அமெரிக்க தூதரகம் போன்ற முக்கியமான அலுவலங்கள் இருக்கக்கூடிய இடமாக அது இருக்கிறது. அங்கு தங்கினால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும்.
காரணம்-5 ஒரு குழந்தைக்கு தாயாக இருப்பதையே நளினி விரும்புகிறார் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.
காரணம்- 6 18 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்காக, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதையும் ஏற்க முடியாது.
காரணம்- 7 இதற்கு முன்னால் நளினியின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியவைகளை ஆராய்ந்துள்ளதால் முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய முடியாது.
காரணம்- 8 அவரைப் பரிசோதித்த மனோதத்துவ மருத்துவரும் விடுதலை செய்யலாம் என்று உறுதியாகக் கூறவில்லை.
ஒரு ஆயுள் தண்டனைக்கைதி 14 ஆண்டுகள் சிறையில் இருந்த பின் விடுதலை செய்யப்படலாம் என்கிற விதிப்பதி அரசு அறத்தின் படியல்ல நீதியின் படி நடந்திருந்தால் கூட நளினி ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே விடுதலை செய்யப்ப?ட்டிருக்க வேண்டும். ஆனால் நாம் தான் கருணை வழியும் தேசத்தின் குடிமக்கள் அல்லவா? அதனால்தான் அநீதியாக சிறையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்ணின் விடுதலையை மறுத்து எட்டு காரணங்களை அடுக்கியிருக்கிறார்கள். ஒரு கொலைச்சதியில் சிக்கி நீண்ட காலமாக சிறை வாழ்வை அனுபவிக்கும் ஒரு பெண் தன் குழந்தையிடம் வாழ விரும்புவதைக் கூட அனுமதிக்காத கருணை.... அதில் நான்காவது காரணத்தைப் பாருங்கள் நளினியை விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கு கெடுமாம்.
மூன்றாயிரம் சீக்கிய மக்களைக் கொன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெகதீஸ் டைட்லரும், சஜ்ஜன்குமாரும் சுதந்திரமாக உலவுகிறார்கள். நீண்டகாலமாக சீக்கிய மக்கள் இனப்படுகொலைக்கு எதிராக நீதி கேட்கிறார்கள் இந்தியாவிடம். ஆனால் இன்று வரை மௌனமே சீக்கியர்களுக்கு பதில். ஜெகதீஸ்டைட்லருக்கும், சஜ்ஜனுக்கும் எம்.பி சீட். ஆகா மத்தியில் ஆளும் காங்கிரஸ் தான் அப்படி......... கருணாதான் திராவிடத் திருமகன் ஆயிற்றே நீதி வழுவா நெறி கொண்ட மன்னன் அல்லவா? 'கருணாநிதி குற்றவாளிகளைத் தண்டிப்பார், குற்றவாளிகளை விடுதலை செய்தால் சட்டம் ஒழுங்கல்லவா கெட்டு விடும் என்று அதனால் நீதியாகத்தானே நடப்பார், நளினியின் விஷயத்திலும் அதுதான் நடந்தது' என்று நீங்கள் நினைத்தால் உங்களைப் போன்ற முட்டாள் யாரும் இருக்க முடியாது.
தோழர் லீலாவதியைக் கொன்ற கொலை பாதகர்களுக்கு அண்ணாதுரை பிறந்த நாளில் விடுதலை, அதுவும் நன்னடத்தை விதிகளின் கீழ்...... தினகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து மூன்று ஊழியர்களை உயிரோடு எரித்துக் கொன்ற அட்டாக் பாண்டி என்னும் திமுக ரௌடிக்கும் விடுதலை. விடுதலை மட்டுமல்ல மதுரை மாவட்ட விவசாயத்துறை ஆலோசனைக் குழு வாரியப் பதவி. தா.கிருட்டிண?னை அழகிரி கொல்லவில்லை என்று நீதிமன்றம் அவரை நிரபராதி என்று விடுதலை செய்து விட்டது. அப்படியானால் தா.கிருட்டினனை கொன்றது யார்? ஆமாம் யார்தான் கொன்றார்கள். இந்தக் குற்றவாளிகள் எல்லாம் வெளியே வந்தபின்பு கெடாத சட்டம் ஒழுங்கு, நளினி என்ற பெண் வெளிவருவதால் கெட்டு விடப்போகிறாதா? ஒரு வேளை ந?ளினி மீது சும?த்த?ப்ப?ட்ட? குற்ற?ச்சாட்டு உண்மையென்றே வைத்துக்கொண்டாலும் கூட?, அவ?ருக்குப் பின்புல?மாக? இருந்த?தாக? இவ?ர்க?ள் சொல்கிற? விடுதலைப் புலிக?ள் இய?க்க?ம் த?ற்போது அழிக்க?ப்ப?ட்ட? நிலையில், ந?ளினியின் க?ண?வ?ர் அவ?ருட?ன் வெளிவ?ராத? நிலையில், ந?ளினி என்ற? அப?லைப் பெண் எந்த?வித?த்தில் பொதும?க்க?ளின் அமைதிக்கு ஆப?த்தான?வ?ர்? ஒரு வேளை க?ருணாநிதி தான் மிக?வும் போற்றும் க?ண்ண?கி போல், நளினியும் த?ன?க்கு இழைக்க?ப்ப?ட்ட? அநீதிக்காக? இந்த?த் த?மிழ்நாட்டை அழித்துவிட்டால், த?ன?து ம?க?ன்க?ளும், பேர?ன்க?ளும் எந்த? நாட்டை ஆள்வ?து என்று யோசிக்கிறாரோ?
த?னியொரு அபலைப் பெண்ணிடம் இருந்து த?மிழ?கத்தின் ச?ட்ட? ஒழுங்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றால், கல்லக்குடி வீரர், தள?பதி, அஞ்சாநெஞ்ச?ன் உள்ளிட்ட? ப?ட்ட?ங்க?ளை சும?ந்து கொண்டு, க?ண?க்க?ற்ற? அதிகார?ங்க?ளுட?ன், ஆள் அம்பு சேனையுட?ன் வ?ல?ம் வ?ரும் நீங்களும் உங்க?ள?து மகன்க?ளும் 23ம் புலிகேசியின் வாரிசுகளாக?த்தான் உண?ர?ப்ப?டுவீர்க?ள்!
நளினி விடுதலையை தங்கபாலு, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், சு.சாமி, சோனியா, என எல்லோரும் வெளிப்படையாகவே எதிர்க்கிறார்கள். கருணாநிதியும் எதிர்க்கிறார் என்பது நீதிமன்றத் தீர்ப்பு மூலம் வெளிப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் தயவுடன் நடக்கும் தனது ஆட்சியைக் காப்பாற்ற கருணாநிதி எந்த அளவிற்கும் கீழிறங்கி குனிந்து வளைந்து கொடுப்பார் என்பதை கடந்த நான்காண்டுகளாகப் பார்த்து வரும் நமக்கு நளினி வழக்கு மேலும் ஒரு உதாரணம்.
எப்போதும் குனிந்தபடியே இருந்தால் பின்னாடி இருப்பது முதுகெலும்பல்ல என்பதை தமிழக மக்கள் குறித்துக் கொள்கிறார்களோ இல்லையோ, வரலாறு நிச்சயம் குறித்துக் கொள்ளும்.
No comments:
Post a Comment