Sunday, April 11, 2010

"முக்கி" பார்க்கும் இலங்கை அரசும் ... இணைந்து போகும் சில இணையதளங்களும்

மே 18க்கு பிறகு... ஈழத்தமிழர்கள் கனவிலும் அரங்கேறாத பல காட்சிகள். புலம்பெயர் தேசங்களில் நடந்தேறி வருகிறது. அவை எல்லாமே ஈழத்தமிழர்களின் அபிலாசைகளுக்கு வேட்டு வைக்கின்ற சம்பவங்களாகவே அமைந்து அலைவருகின்றது. அதற்காக இலங்கை அரசு பாரிய அளவில் "காய்"களை நகர்த்தி வருகின்றது.
அவ்வழியில் இலங்கை அரசு பாரிய ஆளணிகளையும் பண பலத்தினையும் பிரயோகிக்கின்றது.
அமெரிக்காவில் வாழும் சிங்களவர்களுக்கு நூறு டொலர் பணமும் சாப்பட்டுப்பொதியும் கொடுத்து பான் கீ மூனுக்கு எதிராக கோசம் எழுப்பச் செய்தது முதல் புலம் பெயர் மக்களுக்காக இயங்கும் இணையத்தளங்களை தமக்கு இசைவாக மாற்றி தாளமிட வைக்கின்ற வரை இலங்கை அரசுக்கு நிகர் இலங்கை அரசுதான்.
இதில் மிகமிக கவலைதரும் விடயம் என்னவென்றால் எமது ஈழ விடுதலைக்காக மூச்சாக பாடுபட வேண்டிய ஒரு சில ஈழத்தமிழர்களும் இலங்கை அரசுக்கு விலை போனதுதான் மிகவும் கேவலம்.
அந்த வகையில் புலம்பெயர் மக்களால் புலத்தில் முன்னெடுக்கப்படுகின்ற ஈழத்தமிழர்களுக்கான போராட்டங்களையும் முயற்சிகளையும் இவை போன்ற இணையத்தளங்களும் நபர்களும் மழுங்கடித்து வருகின்றனர்?
அப்படி இருக்கும் போது சமீபத்தில் பிரித்தானியாவில் உருவான ஏன்? ஐரோப்பாவிலேயே முதன்முதலான தமிழர்களின் அரசியல் கட்சியான "விடுதலை புலிகள் மக்கள் முன்னணி" உதயமானது யாவரும் அறிந்ததே... ஐக்கிய இராட்சிய அரசுப்பதிவகத்தில் தம்மை ஒரு முழுமையான அரசுக்கட்சியாக பதிவு செய்தனர். விடுதலைப் புலிகல் மக்கள் முன்னணி முறைப்படி தமது அலுவலகத்தையும் லண்டனில் உள்ள குரொய்டன் பகுதியில் திறந்து ஈழத்தமிழர்களுக்கான ஒரு முன்னேற்ற பாதையை வழி சமைத்திருந்தனர். ஆனால் இவையெல்லாம் நடைபெற்று ஓரிரு நாட்களிலேயே இலங்கை அரசின் வழமையான குள்ள நரித்தனத்துக்கு ஒரு சிலர் செயற்படத்தொடங்கி விட்டனர். "விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி" அரசியல் கட்சி பிரித்தானிய அரசினால் தடை செய்யப்பட்டுவிட்டதென்றும், அவர்கள் மீது கடுமையான விசாரணை நடைபெறுகின்றது என்றும் புலம் பெயர் மக்களை குழப்புவதற்கு இணையத்தளங்களால் முயற்சிகள் அரங்கேறி இருந்தன.
ஆனால் இப்பொய்யான பரப்புரைகள் நடைபெற்று அடுத்து வந்த நாட்களில் "விடுதலை புலிகள் மக்கள் முன்னணி" கட்சி முதல் அமர்வினை மிகவும் வெற்றிகரமாகவும் ஆரோக்கியமாகவும் அமைத்திருந்தது என்றால் இலங்கை அரசுக்கு எப்படி இருக்கும்? அத்தோடு பிரித்தானியாவின் ஒருசில அரசியல் கட்சிகள் "விடுதலை புலிகள் மக்கள் முன்னணி" அரசியல் கட்சியினை தம்மோடு இணைந்து செயற்படுவதை விரும்புகின்றனர்.
ஏனெனில் ஈழத்தமிழர்கள் சுமார் மூன்று இலட்சத்துக்கு அதிகமானவர்கள் பிரித்தானியாவில் வசிக்கிறர்கள். அத்தனை வாக்குகளையும் குறி வைக்கவேண்டிய தேவைகளும் இனிவரும் காலங்களில் இவர்களுக்கு உண்டு. இனி பிரித்தானியாவின் ஆளுமையையும் நிர்ணயிக்கும் சிறு பங்கினை கூட ஈழத்தமிழரால் வகிக்கமுடியும் என்பதையே தொட்டுக்காட்டி நிற்கின்றன. இவைகள் அனைத்தைப்பற்றியும் இலங்கை அரசு அறிகின்றதோ, ஆத்திரப்படுகின்றதோ என்பதை விட புலம்பெயர் தமிழீழ மக்கள் பொய்யான பரப்புரைகளை பரப்பும் நபர்களையும், இணையத்தளங்களையும் இனம் கண்டு அவர்களை ஒதுக்கி வைத்து முன்னேற்றகரமான பாதையில் ஈடுபடுகின்ற அத்தனை அமைப்புகளுக்கும் தங்களால் முயன்ற பங்களிப்பை செய்து தமிழர்களின் தாயகமாம் தமிழீழத்தை அடைவதற்கு பாடுபடுவோம்... "யார் செய்கிறார்கள் என்பதையும் என்ன செய்கிறார்கள் என்பதையும் மிகமிக அவதானமாக பார்த்திருப்போம்".. அதுவே நாம் இப்போது செய்யவேண்டிய முதல் கடமை... ஹோசிமின்..... "விடுதலை புலிகள் மக்கள் முன்னணி" கட்சியின் முதலாவது அமர்வின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்

No comments:

Post a Comment