Friday, April 9, 2010

தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு பேராசிரியர் திரு.அறிவரசன் அவர

மதுரையில் இன்று பேராசிரியர் திரு.அறிவரசன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடலுக்கு, மதுரை புரட்சிக்கவிஞர் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் தமிழ் உணர்வாளர்கள்,பல்வேறு அமைப்பைச்சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர். ”தமிழ்த்தேசியம்” எனும் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள தமிழ் உணர்வாளர்களையும் தமிழ்த்தேசிய அமைப்புக்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் உயரிய நோக்கில் செயல்பட,தமிழகம் தழுவிய அளவில் “தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு”ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற விருப்பத்தினை திரு.அறிவரசன் அவர்கள் வெளியிட்டார்கள்.தேர்தல் கட்சிகள்,ஆட்சி அதிகாரம்,பதவிகளைப் பெறுவது மட்டுமே கொள்கையாகக் கொண்டுள்ளதால்,அவைகள் தமிழின உரிமைகளை வென்றெடுக்க என்றும் துணை நிற்க மாட்டா என்பது தெளிவு.தமிழ்த்தேசிய அமைப்புக்கள் என தமைக்காட்டிக்கொள்ளும் சில கட்சிகள்,தேர்தலில் நேரடியாகப்பங்கு வகிக்காவிட்டாலும்,தமிழின உணர்வாளர்களை அடக்கி,ஒடுக்க முனைகின்ற அரசியல்கட்சிகளுக்கு சார்பாக தேர்தல் பரப்புரை செய்கின்றன.இத்தகைய அமைப்புக்களையும் தமிழின உணர்வாளர்கள் நம்பியிருக்க முடியாது.தமிழ்த்தேசியத்தை அடிப்படையாகக்கொண்டு செயல்படும் அமைப்புக்கள் தேர்தலில் போட்டியிடாமல்,தமிழின விடுதலை,தமிழீழ விடுதலை எனும் கொள்கைகளில் ஒத்துப்போகின்றன.தமிழ்த்தேசிய அமைப்புக்கள் “தமிழின விடுதலை”எனும் ஒற்றைக்கொலள்கையின் அடிப்படையில் ஒருங்கிணைந்து ஒரு கூட்டமைப்பாக செயல்பட வேண்டும்.பல அமைப்புகளாக,பல்வேறு காலக்கட்டங்களில்,வெவ்வேறு இடங்களில் தமிழர்களுக்கான உரிமைக்குரல் கொடுப்பதை ஆளும் வர்க்கம் அக்குரல்களுக்கு மதிப்பளிக்காமல் புறக்கணிகின்றது.தமிழ்த்தேசிய அமைப்புக்கள் ஒருங்கிணைந்து கூட்டாகச் செயற்படாமல் தனித்தனியே நிற்பதை,இன உணர்வுடைய தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.ஒரு பொதுக்கொள்கையின் அடிப்படையில் தமிழ்த்தேசிய அமைப்புக்கள் கூட்டமைப்பு ஒன்றை இதுவரை அமைத்துக்கொள்ளாமல் இருப்பது குறித்து கவலைகொள்கின்றனர்.தமிழர் வாழ்வுரிமைக்காக போராடுதல் எனும் ஒற்றைக் கொள்கைக்காக கூட்டமைப்பாக செயல்பட முன்வர வேண்டும்.அக்கூட்டமைப்பின் வலுவைக்கண்டு,பிரிந்து கிடக்கும் தமிழின அமைப்புக்கள் அக்கூட்டமைப்பில்தங்களை இணைத்துக்கொள்ள முன்வரும்.வலிமை நிறைந்த கூட்டமைப்பின் குரலுக்கு ஆட்சியாளர்கள் வளைய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.கடந்த காலங்களில் ஈழப்பிரச்சனையில் கட்சிகளைக்கடந்து தமிழகம் தங்கள் ஆதரவை பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தியது.தமிழ்த்தேசிய அமைப்புக்கள் தனித்தனியே நின்றதால்,அந்த உணர்வுகளை ஒருங்கிணைக்க முடியாமல் அந்த எழுச்சி காலப்போக்கில் அடங்கிப்போனது.இது ௧௯௮௩ முதல் ௨௦௦௯ வரை தொடர்கிறது.சீனா,இந்தியா ஆகிய நாடுகளின் ஆயுத உதவியுடன் ஈழத்தமிழர்களை, தடை செய்யப்பட கொத்துக்குண்டுகளால் அழித்து ஒழித்த இலங்கை சிங்கள அரசை “போர்நிறுத்தம்”செய்ய தமிழகமே ஒட்டுமொத்தமாக கோரியபோதும் நம் தமிழின மக்களை காக்க முடியவில்லை.தமிழ்த்தேசிய அமைப்புக்கள் தனித்தனியான தளங்களில் நின்றுகொண்டு ஒரே கோரிக்கையை வலியுறுத்திய போதிலும் தமிழர்களை ஏமாற்றிய தமிழக அரசுக்கோ,சிங்கள பேரினவாத இலங்கை அரசுக்கு துணைபோன மத்திய அரசுக்கோ வலுவான அழுத்தம் கொடுக்க முடியாமல் போய்விட்டது.தமிழினம் ஈழத்தில் அழிக்கப்பட்ட போதும்,தமிழகத்தின் உரிமை அண்டை மாநிலங்களினால் பறிக்கப்பட்ட போதும் அதை எதிர்த்து நின்று போராடித்தடுக்கும் சக்தி கொண்ட வலுவான தமிழ்த்தேசிய அமைப்போ,அல்லது தமிழ்த்தேசிய சிந்தனை கொண்ட அமைப்புக்களின் கூட்டமைப்போ இல்லாமல் போனதை இப்போதாவது உணரவேன்டாமா?தனித்தனியே நின்றுகொண்டு தமிழ்த்தேசியம் பேசுவதில் பலனில்லை.இனத்தை முன்னிறுத்தி,பிற நலன்களைப்பின் நிறுத்தி தமிழ்த்தேசிய அமைப்புக்களின் தலைவர்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பை உடனே கட்டமைக்க வேண்டும்.தமிழ் உணர்வாளர்களின் தணியாத வேட்கை இதுதான்.இந்த உணர்வை தமிழ்த்தேசிய அமைப்புக்களின் தலைவர்களுக்கு தெரிவியுங்கள்.” என்று கூறினார்.ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்கவும்,முகாம்களில் சிறைப்பட்டிருக்கும் இலங்கைத்தமிழர்களுக்கு அடிப்படை உரிமை வழங்க வேண்டும் எனவும்,ராஜிவ்காந்தி படுகொலையில் ஆயுள்தண்டனைக்கைதிகளாக சிறையில் ௧௯ ஆண்டுகாலம் உள்ள நளினி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த்தேசிய அமைப்புக்கள் உதவியுடன் தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பு ,தமிழகத்தில் “மக்கள் வாக்கெடுப்பு” நடத்திட அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது." நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்

No comments:

Post a Comment