பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிப்பெரும் கட்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேலெழுந்து வருவதற்கான தன்மை காணப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளைப் பரந்தளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்தும் தன்மை காணப்படுவதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருக்கிறது.
தமிழ்க் கூட்டமைப்புப் போன்று தமிழ்த் தேசியவாதத்தை வரிந்துகொண்டிருக்கும் ஏனைய கட்சிகள் இருக்கின்றபோதிலும் அதிகளவுக்கு நம்பகத்தன்மையைக் கொண்டதாகத் தமிழ்க் கூட்டமைப்பு காணப்படுகிறது.
உள்ளூர் ஊடகங்களும் அக்கட்சிக்கு நியாயபூர்வமானஎதன்மையை வழங்குகின்றன. ஏனைய தமிழ்த் தேசியவாதக் கட்சிகளுக்கு இது இல்லை.
அண்மைய ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பின் செல்வாக்கானாது இதற்குச் சான்றாகவுள்ளது. தமிழ்க் கூட்டமைப்பின் அறிவுறுத்தலையடுத்து ஜெனரல் பொன்சேகாவுக்கு யாழ்ப்பாண வாக்காளர்கள் அதிகளவுக்கு வாக்களித்திருந்தனர்.
அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டுமென பாதுகாப்பமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்களுடன் சமஷ்டி முறைமையை தமிழ்க் கூட்டமைப்பு கேட்பதாகவும் அதனால் இக்கட்சியைத் தடைசெய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இக்கருத்துக்கு ஆதரவாக ஆளுங்கட்சியின் முக்கியஸ்தரான மைத்திரிபால சிறிசேனவும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
சிங்கள மேலாதிக்கத்தைக் கொண்ட இலங்கை அரசாங்கத்தினால் மௌனமாக்கப்படவிருப்பது தொடர்பாக குரல்கொடுக்கும் தமிழர்களின் குரலாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னை உருவகப்படுத்துவதற்கு இந்த மாதிரியான பிரசாரம் இலாபகரமானதாக அமையுமெனவும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் குறிப்பிட்டிருக்கிறது
No comments:
Post a Comment