Saturday, April 24, 2010
விடுதலைப் புலிகள் பலரை திருப்பி அனுப்பினோம் ? மலேசிய அரசு தகவல்
சிறீலங்கா அரசின் பிடியில் இருந்து தப்பி மலேசியா சென்ற விடுதலைப் புலிகள் பலரை தாம் கைது செய்து தடுத்து வைத்திருப்பதாக, மலேசிய அரசாங்கம் முதன்முறையாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.இவ்வாறு கைது செய்தவர்களில் பலரை ஓகஸ்ட் 2009 இற்கும் மார்ச் 2010இற்கும் இடையில் சிறீலங்காவிற்கு திருப்பி அனுப்பியிருப்பதாகவும் மலேசிய அரசு ஒப்புக்கொண்டிருப்பதாக, அந்த நாட்டின் பத்திரிகையான நியூ ஸ்ரெயிட்ஸ் ரைம்ஸ் (New Straits Times) தகவல் வெளியிட்டுள்ளது.மலேசிய அரசினால் திருப்பி அனுப்பப்பட்ட பலரில் விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களும் அடங்குவதாகவும், இவர்கள் அனைவரும் கொழும்பில் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment