தமிழக அரசியல் மறந்தேபோன ஈழ விவகாரத்தை முன்னிறுத்தி, மீண்டும் போராட்டக் களத்தில் இறங்கியிருக்கிறார். இலட்சிய தி.மு.க.வின் நிறுவனத் தலைவர் விஜய டி.இராஜேந்தர். சமீபகாலமாக இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை பெற்றுத்தர வலியுறுத்தியும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய - மாநில அரசுகளைக் கண்டித்தும், அடுக்குமொழிகளை அள்ளிவிட்டுக் கொண்டிருப்பவரை நேரில் சந்தித்தோம்.
ஈழத் தமிழர் நலனில் ஏன் இந்த திடீர் அக்கறை?
தேர்தலுக்காக மட்டுமே ஈழம் பேசுபவனல்ல. இந்த விஜய டி.ஆர். தமிழர்களின் தேறுதலுக்காக பேசுபவன். கேபினெட் அந்தஸ்துக்கு இணையான மாநில சிறுசேமிப்புத்துறை துணைத்தலைவர் பதவியையே ஈழத்தமிழர் நலனுக்காகத்தான் தூக்கியெறிந்தேன். இலங்கைத் தமிழரின் நலன்குறித்து,நான் எழுதி இசையமைத்த 'குண்டு போட்டுக் கொல்றானே..!" பாடல்கூட இணைய தளத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்கூட, 'ஆடுகள் மேயும் இடமாகி விட்டது புலிகளின் கல்லறை! ஆனால், புலிகளின் பெயரைச் சொல்லியே சிலர் சேர்த்து விட்டனர் சில்லறை!" என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன்.
இலங்கைத் தமிழர் நலன் காக்க தி.மு.க. அரசு எந்த வகையில் தவறி விட்டது என்கிறீர்கள்?
இலங்கைத் தமிழர் மட்டுமல்ல. இங்கிருக்கும் தமிழர்களும் நிம்மதியாக வாழ வேண்டும் எனும் உண்மையான அக்கறையோடு தி.மு.க. செயல்படவில்லை. மீனைச் சுட்டுத் தின்று கொண்டிருக்கிறார்கள் மக்கள். நம் தமிழக மீனவர்களையே சுட்டுத் தின்று கொண்டிருக்கிறார்கள் சிங்கள இராணுவத்தினர். தினம் தினம் செத்து விழும் அந்த மீனவர்கள் தமிழர்கள் இல்லையா? இந்தியர்கள் இல்லையா? தமிழன் என்ற உணர்வு அவர்களுக்கு உண்மையாக இருந்தால், வெறும் கடிதம் எழுதியே கடமையை முடித்துக் கொள்வார்களா?
இதோ.... சட்ட மன்றத் திறப்புக்கு பிரதமர், சோனியா காந்தியே வருகிறார்கள்.. காதோரம் சொல்ல வேண்டிய விஷயத்தை ஏன் கடல் கடந்து செல்லும் கடிதமாக எழுத வேண்டும்? பிரதமருக்கு கலைஞர் தேநீர் கொடுக்கிறார்... ஈ பறக்கும் இந்த அண்மை இருக்கும்போது எதற்காக இ-மெயில்? மீன் காய்ந்து ஆகலாம் கருவாடு! ஆனால் மீனவனே செத்து ஆகலாமா கருவாடு! இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்த பகுதியை ஆக்கி விட்டார்கள் இடுகாடு. ஆனால், கலைஞர் இங்கே நடத்திக் கொண்டிருக்கிறார் செம்மொழி மாநாடு.
தி.மு.க.வின் தொடர் வெற்றிகள் அவர்களுக்கு இருக்கும் மக்கள் ஆதரவைத்தானே காட்டுகிறது?
அரசியல் சதுரங்கத்தில் அப்படி நகர்த்துகிறார்கள் காயை.. அதனால்தான் மக்கள் மத்தியில் இப்படி ஏற்பட்டிருக்கிறது ஒரு மாயை.. பென்னாகரத்தில் பட்டுவாடா செய்யப்படும் பண முடிப்புகளை கணக்கில் வைத்தே, 'பென்னாகரத்தில் 85 சதவிகித ஓட்டுப் பதிவாகும்" என தேர்தலுக்கு முன்பே நான் சொல்லிவிட்டேனே! தேர்தல் கமிஷனை நினைத்தெல்லாம் இவர்களுக்குப் பயமில்லை. (கட்டை விரலையு ம் ஆள்காட்டி விரலையு
ம் ~டாஸ்| போடுகிற மாதிhp சுண்டிக்காட்டி...) ஒன்லி கமிஷனை வைத்துதான் இவர்களின் கணக்கே!
தி.மு.க.வில் உங்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதால்தான் இவ்வளவு காரமா?
(இன்னும் சீரியஸாகி) கலைஞருக்கும் எனக்கும் உள்ள உறவு குரு - சிஷ்யன் உறவு. எம்.ஜி.ஆருக்கு எதிராக தமிழகமெங்கும் தி.மு.க. மேடைகளில் சிங்கமாக முழங்கியவன் இந்த இராஜேந்தர். தி.மு.க.வை விட்டு வைகோ பிரிந்து சென்ற நெருக்கடியான காலகட்டத்திலும் மன மாச்சாhpயங்களை மறந்து கட்சிக்கும் கலைஞருக்கும் உறுதுணையாக இருந்தவன். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கலைஞரைக் கைது செய்து சிறை உடை மாட்டி,கையில் தட்டையும் கொடுத்தனர். கலைஞரின் விடுதலைக்காக அப்போது வள்ளுவர் கோட்டத்தில் எனது தலைமையில் துணிச்சலாக கண்டனக் கூட்டத்தை நடத்திக் காட்டினேன். அப்போது மு.க.அழகிரி எங்கே போனார்? இல்லை.. வாளெடுத்து தலைமை தாங்க வேண்டிய தளபதி ஸ்டாலின்தான் வந்தாரா?
பாண்டிபஜாரில் தணா போராட்டம் நடத்தினேன். ஆளுங்கட்சியின் கெடுபிடி,போலீஸ் தடியடி.. அத்தனையையும் தி.மு.க.வுக்காகத் தாங்கிய வரலாறு எனக்குண்டு. ஆனால், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னால் நான் கட்சியில்
ஓரங்கட்டப் பட்டேன். இன்றைக்கு ஆயிரம் பேர் பேனரையும் கொடியையும் பிடித்துக் கொண்டு தி.மு.க.வுக்குள் வரலாம். அவர்களெல்லாம் ஆற்றல் படைத்தவர்களா என்பதுதானே கேள்விக்குறி (சட்டென்று கூலாகி, அடுத்த வாpயைப்பாடியே காட்டுகிறார்.)
ஆறு ஒன்று இருந்தால்தான் ஊருக்கு அழகு..
ஆற்றல் படைத்தவர்கள் அருகில் இருந்தால்தான் தலைவருக்கு அழகு..
தி.மு.க.வில் தற்போது நடந்து வரும் தலைமைப் பதவி சலசலப்பு குறித்து என்ன சொல்கிறீர்கள்?
இது மு.க. குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்னை. நான் மூக்கை நுழைக்கக் கூடாத பிரச்னை. ஆனால் சகோதரச் சண்டைகளால்தான் விடுதலைப் புலிகள் இயக்கமே இன்றைக்கு தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்பதை மறுக்க முடியுமா? என்று தனது தரப்பை நியாயப்படுத்தும் கலைஞரிடம் இங்கே நான் சில கேள்விகள் கேட்கிறேன். விளக்கம் சொல்லட்டும்.
தி.மு.க.விலிருந்து ஈ.வி.கே.சம்பத், எம்.ஜி.ஆர், வைகோ வெளியேற்றப்பட்டார்களே.. அது சகோதரச் சண்டையில்லையா? என்னில் பாதி, என் வயதில் பாதி, என் திறமையில் பாதி என்றெல்லாம் பாராட்டிய கலைஞராலேயே கட்சியிலிருந்து தூக்கி வீசியெறியப்பட்டேனே... அது சகோதர யுத்தமா? இல்லையா? நாங்களெல்லாம் உடன்பிறவா சகோதரர்கள்தான். ஆனால் இன்றைக்கு இவர்கள் இயக்கத்திலே ஒருதாய் வயிற்றில் பிறந்த சகோதரர்களுக்குள்ளேயே நடந்து கொண்டிருக்கிறதே. இது என்ன வகை யுத்தம்? இவர்கள் மட்டும் நடத்துவார்களாம் யுத்தம். ஆனால் இலங்கையில் இது நியாயமில்லாத அபத்தம்?
நன்றி : ஜூனியர் விகடன்,
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment