Saturday, April 24, 2010
விடுதலைப் புலிகள் மீது பொய்யான போர்க்குற்ற வழக்குகள் ? இந்தியா ஆலோசனை
சிறீலங்கா அரசினால் கைது செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மீது பொய்யான வழக்குகளைத் தொடுப்பதற்கு சிறீலங்கா அரசு முனைந்து வருவதுடன், இது தொடர்பாக கைதான விடுதலைப் புலிகள் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.தாம் கூறும் பொய்யான போர்க்குற்றங்களை ஒப்புக்கொண்டால் பொதுமன்னிப்பு வழங்கப்படும் என்ற தவறான தகலைத் தெரிவித்தே, இவ்வாறான முயற்சியில் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.பொதுத் தோ்தலில் மகிந்த தலைமையிலான அரசு பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், இந்திய அரசின் ஆலோசனையில் இவ்வாறான செயற்பாடுகள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.விடுதலைப் புலிகளின் குடும்பத்தினருக்கு சட்ட உதவிகள் புரிவதாக்க்கூறியே சிறீலங்கா அரசினால் திட்டமிட்டு நியமிக்கப்பட்டவர்களால் இவ்வாறான போர்க்குற்றம் சுமத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.எனவே புலம்பெயர்ந்த மக்களும், அமைப்புக்களும் தடுப்புக் காவலிலுள்ள விடுதலைப் புலிகள் சட்ட ஆலோசனையைப் பெறுவதற்கான உதவிகளைப் புரிவதன் ஊடாக இந்திய ? சிறீலங்கா அரசுகளின் இந்த முயற்சியைத் தடுக்க முடியும் என நம்பப்படுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment