Saturday, April 24, 2010
புலிகளின் பயமில்லாத் துணிவால் எழும் கலாசாரச் சீரழிவைக் கட்டு
புலிகளின் பயமில்லாத் துணிவால் எழும் கலாசாரச் சீரழிவைக் கட்டுப்படுத்துவது யார்?விடுதலைப்புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டு விட்டனர் என்பதற்காக அவர்களால் கட்டுப்படுத்தப் பட்ட சில விடயங்களை மறப்பதற்கும் மறுப்பதற்கும் முடியாமல் உள்ளது.அதில் ஒரு விடயம் கலாசாரச் சீரழிவை அவர்கள் கட்டுப்படுத்திய விதமாகும். அதாவது கற்பழிப்பு, கொள்ளை, கசிப்பு, கோஷ்டி மோதல் போன்ற சமூக சீரழிவை அவர்கள் பூரண மாகக் கட்டுப்படுத்தி இருந்தனர். இதன் காரணமாக அச்சமற்ற வாழ்வை மக்கள் அனுபவித்தனர்.இரவு வேளையிலும் பெண்கள் தனித்து நடமாடக்கூடியதாக இருந்தது. சந்திகளில் கூடி நின்று இளைஞர்களுடன் சேட்டைகள், கோஷ்டி சண்டைகள் இல்லாமல் போக சந்திகள் நல்ல சங்கதிகளை பேசக்கூடிய இடமாக மாறின. இவ்விதம் சமூகச் சீரழிவை அடியோடு அழித்த பெருமை விடுதலைப்புலிகளையே சாரும்.இப்போது அவர்கள் இல்லாத துணிவில் சமூகச் சீரழிவு யாழ். குடாநாட்டில் எழுந்து நின்று ஆடத் தலைப்பட்டுள்ளது. கற்பழிப்பு, களவு, கொள்ளை, தனிமையில் இருப்பவர்களை கொலை செய்தல், கோஷ்டி மோதல், மதுபோதை, சந்திச் சண்டித்தனம் என எல்லாம் தலை விரித்தாடுவதை காணும் போது நெஞ்சம் வெடிக்கின்றது. நிலைமை இப்படியே போகுமாயின் தென்பகுதியில் இருக்கக் கூடிய பாதாள உலகக் கோஷ்டி யாழ். குடாநாட்டில் உருவெடுக்கலாம் என்ற அச்சம் நியாயமானதாகவே இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment