வவுனியா செட்டிக்குளம் பகுதியில் உள்ள இராமநாதன் நலன்புலி முகாமில் மக்களுக்கான குடிநீர் விநியோகம் முற்றாக துண்டிக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பில் அங்கு அமைக்கப்பட்டுள்ள அரச செயலகத்திற்கு மக்கள் சென்று விசாரித்தபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.இவ்வாறு சென்ற மக்கள் மீது சிறீலங்கா படைஅதிகாரி nஐயவீர என்பவரே தாக்குதல் நிகழ்த்தியதாகவும் நீங்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்ததால் அவர்களிடமே சென்று தண்ணீரை கேளுகள் என்று கூறி விரட்டி அடித்ததாக தெரியவருகிறது.இதுதொடர்பில் கருத்து தெரிவித்த மக்கள்:
எமது வாழ்க்கையில் நாங்கள் உழைத்தே வாழ்ந்து வந்தோம். எமக்கான நிலத்தில் நாங்கள் தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டால் நாங்கள் தண்ணீருக்கும், உணவுக்கும் கையேந்தி யாரிடமும் அடி உதை வேண்டிய தேவை எமக்கில்லை. எம்மை இப்போதே எமது ஊர்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டால் நாங்கள் உடனடியாகவே வெளியேறுவோம் என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
Saturday, April 10, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment