Saturday, April 24, 2010
ஆயுதத்தின் மூலமே இலங்கை அரசை அடக்க முடியும் முன்னால் புலிகள்
ஆயுதத்தால் மட்டுமே இனவெறி பிடித்து தாண்டவமாடிவரும் சிங்கள அரசை அடக்க முடியும் என்று முன்னால் புலிகள் பலரிடம் கருத்து தெரிவித்துள்ளனர்.உலக நாடுகளை திருப்தி படுத்துவதற்காக என்றால் சிங்கள அரசுடன் அரசியல் பேசலாம் ஆனால் அதில் கூட எந்த பலனும் இருக்கப்போவதில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல் ஜெயசிக்குறு முறியடிப்பு தாக்குதல்,எவராலும் உடைக்க முடியாது என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகளாலேயே உறுதிப்படுத்தப்பட்டு தெரிவிக்கப்பட்ட ஆனையிறவு மீட்பு சமர் என பல வெற்றி தாக்குதல்களை நாம் செய்ததாலேயே சிங்கள அரசு எம்முடன் பேச முன்வந்தது என்பதே உண்மை.எனவே நாம் தற்போது பலம் இழந்து விட்டோம் என்று அரசு கூறுகிறது இதனால் நாம் இனி சிங்கள அரசோடு பேச முடியாது.அவ்வாறு நாம் பேசினாலும் எம்மை கையாலாகாதவர்களாகவே அவர்கள் கருதுவார்கள்,எமக்கான ஒரு நல்ல தீர்வைக்கூட அரசு முன்வைக்காது என்பதே உண்மை.இதனாலேயே சொல்கிறோம் இலங்கை ஆரசை அடிபணிய வைப்பதற்கு ஆயுதத்தாலேயே முடியும் என்பது உண்மை என்று விடுதலைப் புலிகளின் முன்னால் உறுப்பினர்களுடன் பலர் உரையாடிய போது தெரிவித்துள்ளனர்_________________எதிரியின் இலங்கை விசேட செய்தியாளர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment