Friday, April 9, 2010

வன்னி யுத்தத்தில் இறந்தவர்கள், சுனாமியால் இறந்ததாக பதிவு...!

வன்னியில் இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் படுகொலைகளை மூடிமறைப்பதற்கான முயற்சிகள் அரசாங்கத்தினால் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.வன்னியில் புதுமாத்தளன் முதல் முள்ளிவாய்க்கால்வரையான பகுதிகளில் நடந்த போர்களில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. சபைத் தகவல்கள் உறுதிப்படுத்தியிருந்தன.இந்த நிலையில் அந்தப் பகுதிகளில் கொல்லப்பட்ட மக்களது உயிரிழப்புக்கள் அனைத்தையும் சுனாமி பேரலைத் தாக்கத்தின்போது கொல்லப்பட்டதாக பதிவினை மேற்கொள்ளுமாறு மக்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.வவுனியா நலன்புரி நிலையங்களில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் இதற்கான கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முகாம்களுக்குப் பொறுப்பான குறிப்பிட்ட அதிகாரிகள், கிராம அலுவலர்கள் மூலம் மக்களது உயிரிழப்புக்களைப் பதிவு செய்யும்போது சுனாமியின்போது உயிரிழந்தாக பதிவினை மேற்கொள்ளுமாறு அரசு மேலிடம் நிர்ப்பந்தித்து வருவதாக முகாம்களில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியாக நெருக்கடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற இன்றைய சூழலில் வன்னிப் போர்க்குற்றங்களை மூடி மறைப்பதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்றாக இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்." நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்

No comments:

Post a Comment