Friday, April 9, 2010

தமிழீழம் கரையோரப் பகுதிகளில் சிறிலங்கா பல புதிய தளங்களை அமைக

தமிழீழம் கரையோரப் பகுதிகளில் சிறிலங்கா பல புதிய தளங்களை அமைக்கவுள்ளது.விடுதலைப் புலிகள் இயக்கம் மீளவும் புத்துயிர் பெறுவதைத் தடுப்பதற்காகவே புதிய கடற்படைத்தளங்களை [Naval Cantonments] நிறுவி வருவதாக சிறிலங்கா கடற்படை கூறியுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னர் இந்தக் கடற்பகுதி வழியாகவே ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் ஏனைய கருவிகளைப் பெற்று வந்தது என்றும் அதுபோன்று எந்தப் பொருட்களும் எதிர்காலத்தில் அவர்களுக்குக் கிடைக்காமல் செய்வதான, நீண்டகால நோக்கிலேயே இந்தத் தளங்கள் அமைக்கப்படுவதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர். முதற்கட்டமாக மன்னாருக்கும் புத்தளத்துக்கும் இடைப்பட்ட வடமேற்கு கடலோரப் பகுதியான முள்ளிக்குளத்தில் கடற்படையினர் பாரிய தளம் ஒன்றை அமைத்து வருகின்றனர். முள்ளிக்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய தளத்தின் கட்டுமான வேலைகளை, சிறிலங்காக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசார சமரசிங்க கடந்த 4ம் திகதி ஆய்வு செய்தார்.நீண்டகால நோக்கல் அமைக்கப்படும் தளம் என்பதால் தரமான முறையில் கட்டுமானப் பணிகளைச் செய்யும்படி அவர் பொறியியலாளர்களைக் கேட்டுக் கொண்டதாகவும் தெரியவருகிறது. அதேவேளை கடற்படையின் இரண்டாவது புதிய தளம் அமைக்கும் வேலைகளும் மிகவிரைவில் இதே பிரதேசத்திலேயே ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்கள், சவால்களைச் சமாளிப்பதற்கு கடற்படையினரும் புதிய தளங்களும் தேவைப்படுவதாக சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் கப்டன் அத்துல சேனாரத் தெரிவித்துள்ளார். கடலோரப் பகுதிகளில் அமைக்கப்படும் பிரதான தளங்கள் மற்றும் செய்மதித் தளங்கள் [satellite bases] என்பன வடக்கு,கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்பிராந்தியத்தில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கு உதவும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்." நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்

No comments:

Post a Comment