Saturday, April 10, 2010

மண்ணுக்குள் உறங்கும் கொலைகாரன்

கண்ணி வெடிகள் எதிரிகளை இலக்கு வைத்து அவர்களை அழிக்க புதைக்கப்படும் ஆபத்து விதைகள் என்பது வெளிப்படையாக பலர் அறிந்த விடயம். ஆனால் அவை அப்பாவிகளுக்காகவும் விதைக்கப்படும் அபாய வித்துக்கள் என்பதே உண்மை. இன்று உலகளாவிய ரீதியில் உயிர்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஒரு விடயமாக கண்ணி வெடிகளும் வெடிக்காத வெடிப்பொருட்களும் உருப்பெற்றுள்ளதை யாராலும் மறுப்பதற்கில்லை. பொதுவாக யுத்தத்தின் போது எதிரிகளை முன்னேற விடாமல் தடுப்பதற்கும் எல்லைப்புற பாதுகாப்புக்காகவும் கண்ணிவெடிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஓரு குறித்த தேவைக்காக இவ்வாறு பயன்படுத்தப்படும் இந்த வெடிப்பொருளானது யுத்தம் முடிந்தப்பின்னரும் பல அப்பாவி உயிர்களை காவுக்கொள்கின்ற அதேவேளை பலரை விசேட தேவையுடையவர்களாக மாற்றியுள்ளமையும் வேதனையளிப்பதாகவே உள்ளது.யுத்த எச்சங்களாக காணப்படும் இந்த கண்ணி வெடிகள் முறையாக அகற்றப்படாமை மற்றும் இதன் அபாயம் தொடர்பாக மக்களிடையே போதியளவு விழிப்புணர்வு இன்மை போன்ற காரணங்கள் இழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் தாமதத்துக்கும் காரணமாக அமைகின்றன. அப்பாவி மக்களின் உயிர்களுக்கு வேட்டு வைக்கும் இந்த கண்ணி வெடி அபாயம் குறித்து அனைத்துலக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் அவசியம் என்பது சர்வதேச ரீதியில் உணரப்பட்டது. இதற்கமைய 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைப்பெற்ற ஐநா கூட்டத்தில் ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி கண்ணி வெடி தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்ணி வெடிக் கெதிரான செயற்பாடுகளுக்கு உதவியளித்தல் (International day for mine Awareness and Assistance to mine Action ) சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்கமைய 2006ஆம் ஆண்டு இத்;தினம் முதன் முதலாக அனுஷ்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இந்த தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்றும் பல நாடுகளில் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகின்றது. கண்ணி வெடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளித்தல் தொடர்பான கருத்தாடல்கள் 21 நாடுகளில் இன்று மேற்கொள்ளப்படுகின்றன.அதேபோல் 34 நாடுகள் இன்றைய நாளை அனுஷ்டிப்பதற்கு பல்வேறு விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.உலகிலுள்ள 68 நாடுகளில் யுத்தம் காரணமாக 110 மில்லியன் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இவற்றை முற்றாக அகற்றுவதற்கு 1100 வருடங்கள் தேவைப்படும் என கூறப்படுகின்றது.அதேவேளை 600 வகையான கண்ணி வெடிகள் உலகெங்கும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன . தனிநபருக்கெதிரான கண்ணி வெடிகளும் தாங்கிகளுக்கெதிரான கண்ணி வெடிகளுமே யுத்தத்தி;ன் போது பயன்படுத்தப்பட்டுள்ளன.கண்ணி வெடி பாவகையானது இன்று நேற்று உருவானதொன்றல்ல .கி.மு.52 ஆம் ஆண்டில் யுலியஜ்சீசர் தமது எதிரிப்படைகளை அழிப்பதற்காக அவர்கள் பயணிக்ககூடிய இடங்களில் உருக்கிலாலான முட்கள் கொண்ட பொருட்களை புதைத்ததாக வரலாறு எடுத்தியம்புகின்றது.இதுவே உலகில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்ட கண்ணி வெடியாக நம்பப்படுகின்றது.இதனைத்தொடர்ந்து பாரிய அழிவைத் தரக்கூடிய கண்ண வெடிகள் 1ஆம் உலக போரின் போது பாவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இவ்வாறு நாசகார செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் இந்த கண்ணி வெடியொன்றை உருவாக்குவதற்கு மூன்று டொலர்கள் மாத்திரமே செலவாகின்றது. ஏனினும் கண்ணிவெடியை அகற்றுவதற்கு ஆயிரம் டொலர்கள் செலவாவதாக கூறப்படுகின்றது.இதேவேளை வருடாந்தம் 26ஆயிரம் பேர் கண்ணி வெடியால் பாதிக்கப்படுகின்றனர். கண்ணி வெடியால் ஏற்பாடும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்வதும் அதன் பாவனையை தடை செய்வதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளிப்பதும் இன்று உலக நாடுகளுக்குள்ள பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக இலங்கையை எடுத்துக்கொண்டால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் துரிதமாக மீளக்குடியேற்றும் நடவடிக்கைக்கு கண்ணி வெடி பாரிய சவாலாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் மனிதாபிமான கண்ணி வெடி அகற்றும் நடவடிக்கை கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கையில் நிலவிய யுத்த சூழ்நிலையில் கண்ணி வெடியால் 21993 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் பிரதான கள பொறியியலாளர் பிறிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் இது வரையான காலப்பகுதியில் 54 கிராம சேவக பிரிவுகளில் 370,466,498 கிலோ மீற்றர் வரையான பரப்பளவில் கண்ணி வெடியகற்றும் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.அதேபோல் 17844 கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. அதேவேளை வட மாகாணத்தில் 171,898,022 கிலோ மீற்றர் வரையான பரப்பளவில் கண்ணி வெடியகற்றும் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.அதேபோல் 20234 கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன.அதேவேளை 691,867,888 சதுர கிலோ மீற்றர் வரையான பகுதியில் இன்னும் கண்ணி வெடியகற்றும் பணிகள் பூர்த்தியாக்கப்படவில்லையென பிறிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.இலங்கை இராணுவத்தினர் மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் அமைச்சின் கீழ் இயங்கும் கண்ணி வெடி செயற்பாட்டு பிரிவு உட்பட கண்ணி வெடியகற்றும் பணிகளில் 7 சர்வதேச நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.இதேவேளை அரசின் மீளக் குடியேற்றப்படும் திட்டத்துக்கமைய முதன்மை அடிப்படையில் மக்களை மீளக்குடியேற்றும் இடங்கள் இஅவர்களின் வாழ்வாதாரங்களை மேற்கொள்ளும் இடங்கள் இஉட்கட்டமைப்புக்களை மேற்கொள்ளும் இடங்கள் இ இடைக்கால மற்றும் குறைந்தளவு முன்னுரிமையுள்ள இடங்கள் என்ற அடிப்படையில் கண்ணி வெடியகற்றும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவதற்கு சவாலாக உள்ள இந்த கண்ணி வெடியகற்றும் பணிகளை முன்னெடுப்பதற்கு இவர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டுகின்றனர். காலநிலை , கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட இடங்கள் குறித்த போதிய தகவல்கள் இல்லாமை இவளப்பற்றாக்குறை மற்றும் பல்வேறு வடிவங்களிலானான கண்ணி வெடிகள் போன்ற காரணிகள் கண்ணி வெடியகற்றும் பணிகளில் தாமதத்தை ஏற்படுவதற்கு ஏதுவாக அமைகின்றன. கண்ணி வெடி அபாய கல்வி இதேவேளை கண்ணி வெடியால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் மற்றும் இழப்புக்களை தவிர்த்துக்கொள்ளும் முகமாக கண்ணி வெடி தொடர்பான அபாய கல்வியை இடம்பெயர்ந்தவர்களுக்கும் மீளக்குடியேற்றப்படும் மக்களுக்கும் ஏனைய தரப்பினருக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகளை யுனிசெப் அமைப்பின் உதவியுடன் சர்வோதய அமைப்பு மற்றும் சமூக நம்பிக்கை நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச அமைப்புக்கள் முன்னெடுத்து வருகின்றன. ஏந்தெந்தப் பகுதியில் கண்ணி வெடி தொடர்பான ஆபத்தக்கள் அதிகமாக காணப்படுகின்றதோ அங்கெல்லாம் கண்ணி வெடி அபாய கல்வி மேற்கொள்ளப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக யுனிசெப் அமைப்பானது பணியாற்றி வருகின்றது. வீதி நாடகங்கள் , சுவரொட்டிகள் , கருத்தரங்குகள் ,கண்ணி வெடி மாதிரிகள் உட்பட பல்வேறு வகையில் கண்ணி வெடி தொடர்பான அபாயக்கல்வி இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றது. கண்ணி வெடி அபாய கல்வியை இந்த நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றமையே இலங்கையில் கண்ணி வெடியினால் ஏற்படும் பெருமளவான பாதிப்புக்களை தவிர்த்துக் கொளவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.கண்ணி வெடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளித்தல் கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டவரின் மருத்துவ பராமரிப்பு தேவைகள் மற்றும் அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமானதொன்றாக கருதப்படுகின்றது.கண்ணி வெடியால் ஏற்படும் இத்தகைய இழப்பானது பாதிக்கப்பட்டவரை மாத்திரமன்று ஒட்டு மொத்த குடும்பத்தையும் பாதிக்கும் விடயமாக கருதப்படுகின்றது.ஆகவே பாதிக்கப்பட்டவருக்கு வைத்தியசாலைக்கு முன்னரான பராமரிப்பு இவைத்தியசாலைப் பராமரிப்பு இபுனர்வாழ்வு இசமூக பொருளாதார ஒருங்கிணைப்பு இவிசேடமாக சிறுவர்களுக்கு மீள அவர்களின் கல்வியை பெற்றுக்கொடுப்பது போன்றன குறித்து அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவசியமானதொன்றாகும்.3 கண்ணி வெடி பாவனைக்கெதிரான ஒட்டாவா உடன்படிக்கை கண்ணி வெடியின் ஆபத்தையுணர்ந்து அதனை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை 1992ஆம் ஆண்டு கனடா அரசு தீவிரமாக முன்வைத்தது. அதனை தொடர்ந்து 1997ஆம் ஆண்டு கண்ணிவெடி பாவனைக்கு எதிராக ஒட்டாவா உடன்படிக்கையில் 133 நாடுகள் கைச்சாத்திட்டன. இந்த உடன்படிக்கை 1999ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டது. தற்போது 156 நாடுகள் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. அமெரிக்கா இசீனாஇ ரஷ்யா இஇந்தியா இஇலங்கை இகியுபா இபாக்கிஸ்தான உட்பட 37 நாடுகள் இதுவரை இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லையென கூறப்படுகின்றது. இதேவேளை 64 நாடுகள் பயிற்றுவிப்புக்காகவும், தற்பாதுகாப்புக்காகவும் இதைப் பயன்படுத்துவோம் என்ற அடிப்படையில் கைச்சாத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றதுஇந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடுகள் கண்ணி வெடி பாவனை, களஞ்சியப்படுத்தல், உற்பத்தி செய்தல், கொண்டு செல்லல், விற்பனை செய்தல் என்பவற்றை தவிர்த்துக் கொள்ளல். அழிவை ஏற்படுத்தக்கூடிய கண்ணி வெடிகளை உலகிலிருந்து இல்லாதொழிப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுதல் என்பன தொடர்பாக அதிக கவகம் செலுத்தி வருகின்றன. இதேவேளை இந்த உடன்படிக்கையின் மூலம் இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்காக மனிதபிமான கண்ணி வெடிச் செயற்பாடொன்று முன்னெடுக்கப்படுகி;ன்றது. அதில் இந்த அம்சங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.-கண்ணி வெடிகளை அகற்றுதல் (Mine Clearance) -கண்ணி வெடி அபாய கல்வி(Mine Risk Education) - கண்ணி வெடிகளிகனால் பாதிக்கபபட்வர்களுக்கு உதவுதல்;(Survivor Assistance) -கண்ணி வெடிகளை தடை செய்வதற்கான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுதல் ; (Advocacy) - தற்போது பாவனையிலுள்ள மற்றுமு; பாவனைக்கு பயன்படுத்தக்கூடிய கண்ணி வெடிகளை முற்றாக அழித்தல் (Stock Pile Destruction) இந்த உடன்படிக்கையிலுள்ள நிபந்தனைகளை ஏற்று பல நாடுகள் இதில் கைச்சாத்திடாமல் இருப்பதும் கண்ணி வெடி குறித்த அபாயத்தை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகின்றது. ஆகவே இந்த நாடுகளை உடன்படிக்கையில் கைச்சாத்திட தூண்டுதல் இங்குள்ள பெரும் சவாலாக இருப்பதாக வலியுறுத்தப்படுகின்றது. அதேபோல் மக்களுக்கு கண்ணி வெடி அபாய கல்வியை வழங்குதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியளித்தல் என்பவற்றை முறையாக மேற்கொள்வதன் மூலமே இந்த பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். அதேபோல் கண்ணி வெடி அபாயம் கல்வியை மக்களிடையே எடுத்துச் சென்று அவர்களுக்கு விழிப்பூட்டும் நடவடிக்கைகளில் ஊடகங்களும் பங்களிப்பு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது. ஆகவே கண்ணி வெடிகள் அற்ற உலகை உருவாக்குவதற்கு ஒவ்வொரு தரப்;பினரும் பொறுப்புணர்ந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதன் மூலமே கண்ணி வெடி தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்ணி வெடிக் கெதிரான செயற்பாடுகளுக்கு உதவியளித்தல் (International day for mine Awareness and Assistance to mine Action ) சர்வதேச தினம் பிரகடனப்படுத்தப்படதற்கான முழு பயனையும் அடைந்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.நிரஞ்சனி ரோலண்ட்நன்றி மீண்டும் வாழ்வோம்

No comments:

Post a Comment