Sunday, March 14, 2010

இலங்கையின் கடற்பரப்பில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது

இலங்கையின் கடற்பரப்பில் நேற்றைய தினம் 6.0 ரிச்சடர் அளவில் நில அதிர்வு ஒன்று பதிவாகி இருப்பதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் ஆழிப்பேரலை எச்சரிக்கை எவையும் விடுக்கப்படவில்லை.

இந்து சமுத்திரத்தில் இலங்கைத் தீவுக்கு அருகில் இந்த நில அதிர்வு பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதன் சேத விபரங்கள் குறித்த உடனடித்தகவல் எவையும் இதுவரையில் வெளியாகவில்லை.

கொழும்பில் இருந்து தென் கிழக்கு கடற்பரப்பில் 730 மைல்கள் தொலைவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளை 6.4 மற்றும் 6.6 ரிச்சடர் அளவில் நில அதிர்வுகள் தாக்கியதைத் தொடர்ந்து இலங்கையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று மீண்டும் சிலியில் 5 முறை நில அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவை 5 ரிச்சடர் அளவிலும் குறைவானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிலிபின்சிலும் 5 ரிச்சடர் அளவிலான நில அதிர்வு ஓன்று உணரப்பட்டுள்ளது

No comments:

Post a Comment