வீரச்சாவடைந்ததாகச் சொல்லப்பட்ட தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளர் சேரலாதன் உயிருடன் உள்ளார்
தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சன நிறுவனத்தின் மற்றும் தமிழீழ தேசியத் தொலைக்காட்சியின் பொறுப்பாளராக இருந்து முள்ளிவாய்க்காலில் வீரச்சாவினை தழுவிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்ட சேரலாதன் தற்போது உயிருடன் இருப்பதாக தெரியவருகின்றது.
சிறீலங்கா இராணுவத்துடனான இறுதிக்கட்ட சண்டையில் காலில் காயம் அடைந்த இவர் சக போராளியிடம் தான் காயப்பட்டுவிட்டதாகவும,; குப்பி கடிக்கப்போவதாகவும், தன்னை விட்டுவிட்டு போகும்படியும் தெரிவித்ததாகவும் அறியப்படுகிறது.
இதன் காரணமாக சமர்க்களத்தில் நின்ற போராளிகள் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டனர். இதை அறிந்த தலைமைப்பீடம் சேரலாதனுக்கு கேணல் நிலையை வழங்கியதோடு அவரது குடும்பமும் வீரச்சாவு நிகழ்வை நடத்தியிருந்தனர்.
ஆனால் இவர் குப்பியை கடிப்பதற்கு முன்பாகவே கடும் இரத்தப்போக்கால் மயக்கமடைந்துவிட்டார்.
அப்பகுதிக்கு வந்த இராணுவம் இவரை தூக்கிச்சென்று பல மாதங்களாக தீவிர சிகிச்சை அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சுயநினைவு திரும்பிய சேரலாதன், தான் நிதர்சனப்பொறுப்பாளர் என தன்னை அடையாளம் காட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தற்போது இலங்கை இராணுவத்தின் தடுப்புமுகாம் ஒன்றிற்கு மாற்றப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

No comments:
Post a Comment