தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனும், பொட்டு அம்மானும் நலமாக இருப்பதாகவும், அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை தாங்கள் பொறுமையாக மேற்கொள்ளப் போவதாகவும் பொட்டு அம்மானிடமிருந்து தனக்குக் கடிதம் வந்திருப்பதாக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
அவர் இன்று ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில், “பொட்டு அம்மானிடமிருந்து எனக்குக் கடிதம் வந்திருப்பது உண்மைதான். அந்தக் கடிதம் இ-மெயில் மூலமாக அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் தானும் தலைவரும் நலமோடு இருப்பதாகவும், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை பொறுமையாக மேற்கொள்ளப் போவதாகவும் சொல்லப்பட்டிருந்தது. கீழே பொட்டு அம்மான் என எழுதப்பட்டிருந்தது...” என்று தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
மேலும் இது பற்றிச் சொல்கையில், “அந்தக் கடிதம் வந்த பின்னணி குறித்து முழுமையாகத் தெரியாத நிலையில் அது பற்றிப் பேசுவது சரியாக இருக்காது என்பதால்தான் இப்போதுவரையில் நான் அமைதி காத்தேன்.
ஆனால் அந்தக் கடிதத்தில் பொட்டு அம்மான் என எழுதப்பட்டிருந்ததுதான் என்னை பலவிதமாக யோசிக்க வைத்தது. அதனால்தான் அந்தக் கடிதத்தை நான் அப்போதே வெளியிடவில்லை.
பொட்டு அம்மான் என்னிடம் ஏதும் தகவல் தெரிவிக்க நினைத்தால் சில நம்பகமான மீடியேட்டர்கள் மூலமாக எனக்கு எத்தகையத் தகவலையும் சொல்லியிருக்க முடியும். அதனால், இந்தக் கடிதம் பற்றியும், அதன் உண்மைத் தன்மை பற்றியும் தான் மேற்கொண்டு விசாரித்துக் கொண்டிருப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
வேறொரு கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், “உலகத் தமிழர்கள் ஈழ விவகாரத்தில் கலைஞர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தும் இல்லை. நம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கத்தால் ஒட்டு மொத்தப் பழியையும் இங்கிருக்கும் தலைவர்கள், கலைஞர் மீது சுமத்திவிட்டார்கள். கலைஞர் நினைத்திருந்தால் ஈழத்தில் போரைத் தடுத்திருக்க முடியும் எனச் சொல்லி தமிழ் மக்களின் கோபத்தையும் கிளறிவிட்டார்கள். ஆனால், அவர் நினைத்திருந்தாலும் போரைத் தடுத்திருக்க முடியாது என்பதுதான் உண்மை” என்றும் கூறியுள்ளார் திருமாவளவன்.
மேலும், “எனக்கும் ஈழ விவகாரத்தில் கலைஞர் மீது ஆதங்கம் இருக்கிறது. ஈழத்து விடிவுக்காக அவர் காங்கிரஸுடனான கூட்டணியைத் தூக்கி வீசியிருந்தால் அடுத்த கணமே, ‘உலகத் தமிழர்களின் பேராதரவு பெற்ற தலைவராக’ அவர் கொண்டாடப்பட்டிருப்பார். ஆட்சியும் மீண்டும் அவர் வசமே வந்து சேர்ந்திருக்கும்” என்றும் சுட்டிக் காட்டியுள்ளார் திருமாவளவன்.
" நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை, துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம்
Thursday, April 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment