Thursday, January 7, 2010

வேலுப்பிள்ளை அவர்களின் உடலத்தை வல்வெட்டித்துறைக்கு எடுத்துச்செல்ல முடிவு

07 January, 2010 by admin
பனாகொடை இராணுவ முகாமில் நேற்றிரவு(06.01.2010 இலங்கை நேரப்படி சுமார் 8.00 மணியளவில் தேசிய தலைவர் பிரபாகரனின் தந்தை மாரணமானார். இருப்பினும் இச் செய்தி இன்று காலை 5 மணியலவிலேயே (07.01.2010) இலங்கை இராணுவத்தால் வெளியிடப்பட்டது. அவசரமாக இவரது உடலை தகனம்செய்யும் முயற்சிகள் நடைபெறும் வாய்ப்பு இருப்பதன் காரணமாக, இவ் விடையத்தில் தலையிட்ட சிவாஜிலிங்கம் எம்.பி, தலைவரின் தந்தையாரின் உடலத்தை தாமே பொறுப்பேற்று அதனை வல்வெட்டித் துறைக்கு எடுத்துச் சென்று தகுந்த மரியாதையுடன் தகனம்செய்ய இருப்பதாக அதிர்வு இணையத்திற்கு ஒரு சிறப்பு நேர்காணல் மூலம் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒலி வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது. SIVAJILINGAMhttp://www.youtube.com/watch?v=OdenjqW9HFg

Blog Archive